அண்ணாத்த படத்தில் நடிக்கிறேன்... மனம் திறந்த பிரபல மலையாள வில்லன் நடிகர்!!! யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் "அண்ணாத்த" படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர். 

director siva brother joined with rajnikanth annatthe

இயக்குனர் சிவாவின் கல்லூரிகால நண்பரும் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களின் ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். "விஸ்வாசம்" படத்திற்காக தேசியவிருது வென்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். 

director siva brother joined with rajnikanth annatthe

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ பகுதிகளில் நடந்து முடிந்தது. தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் சிவாவின் தம்பியும் ஆவணப்பட இயக்குனர் ஜெயக்குமாரின் மகனுமான  நடிகர் பாலா(பாலக்குமார்) அண்ணாத்தே படத்தில் நடிக்கிறார். இது குறித்து தனது முகநூல் பதிவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நடிகர் பாலா 'வீரம்' படத்தில் தல அஜீத்தின் தம்பியாக நடித்தார். ஏற்கனவே அவர் தமிழில் 'அன்பு' என்கிற படத்தில்  அறிமுகமானார். 'அப்பா அம்மா செல்லம்' என்கிற படத்தில் அவர் ரசிகர்களிடம் நன்கு பிரபலமடைந்தார்.

நடிகர் பாலாவுக்கு மலையாளத்தில் Big B என்கிற படத்தில் மம்முட்டியின் தம்பியாக முருகன் என்கிற தமிழ் ஸ்டண்ட் ஆக்டராக நடித்தார் பாலா.

ஒரே படத்தில் கேரள மக்களின் இதய நாயகனானார். மோகன்லாலின் புலிமுருகன் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.
 

தொடர்புடைய இணைப்புகள்

Director siva brother joined with rajnikanth annatthe

People looking for online information on Annaatthe, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.