LATEST: இரண்டாவது திருமணம் செய்த 'அண்ணாத்த' பட பிரபல நடிகர்! வைரலாகும் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் "அண்ணாத்த" படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

director siva brother bala second marriage pics

இயக்குனர் சிவாவின் கல்லூரிகால நண்பரும் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களின் ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். "விஸ்வாசம்" படத்திற்காக தேசியவிருது வென்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். மேலும் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர். இயக்குனர் சிவாவின் தம்பியும் ஆவணப்பட இயக்குனர் ஜெயக்குமாரின் மகனுமான  நடிகர் பாலா(பாலக்குமார்) அண்ணாத்தே படத்தில் நடிக்கிறார். இது குறித்து தனது முகநூல் பதிவில் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

director siva brother bala second marriage pics

இந்நிலையில் நடிகர் பாலா இரண்டாவது திருமணம் செய்துள்ள புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகின்றன. இந்த திருமண புகைப்படங்களை நடிகர் பாலாவே சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் முதல் மனைவி அம்ருதாவை 2019ல் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் பாலாவுக்கு அவந்திகா எனும் 9 வயதில் ஒரு மகள் உள்ளார். பாலாவின் கதையை தூண்டலாக வைத்தே இயக்குனர் சிவா 'விஸ்வாசம்' படத்தை எழுதி இயக்கி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

நடிகர் பாலா 'வீரம்' படத்தில் தல அஜீத்தின் தம்பியாக நடித்தார். ஏற்கனவே அவர் தமிழில் 'அன்பு' என்கிற படத்தில்  அறிமுகமானார். 'அப்பா அம்மா செல்லம்' என்கிற படத்தில் அவர் ரசிகர்களிடம் நன்கு பிரபலமடைந்தார். பின் நடிகர் பாலா மலையாளத்தில் Big B என்கிற படத்தில் மம்முட்டியின் தம்பியாக முருகன் என்கிற தமிழ் ஸ்டண்ட் ஆக்டராக நடித்தார் பாலா. ஒரே படத்தில் கேரள மக்களின் இதய நாயகனானார். மோகன்லாலின் புலிமுருகன் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Director siva brother bala second marriage pics

People looking for online information on Annaatthe, Bala, Siruthai Siva will find this news story useful.