அண்ணாத்த படத்தின் வில்லன் இவரா? மரண மாஸ் அப்டேட்னா இதான்!...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சிவா இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் "அண்ணாத்த" படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை பகுதிகளில் நடந்து முடிந்தது. தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மேலும் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் லக்னோ மற்றும் கொல்கத்தா பகுதிகளில் நடப்பதாகவும், இந்த படப்பிடிப்புகள் இம்மாதம் (ஆகஸ்ட்) 19-ஆம் தேதி வரை நடக்கும் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. அதே சமயம் இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் இல்லாததால், அவர் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குனர் சிவாவின் கல்லூரிகால நண்பரும் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களின் ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். "விஸ்வாசம்" படத்திற்காக தேசியவிருது வென்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர்.

இந்நிலையில் படத்தில் பணிபுரியும் மற்றொரு நடிகரை தயாரிப்பு தரப்பு இன்று (14.08.2021) அறிவித்துள்ளது. அதன் படி தீரன் அதிகாரம் ஒன்று, தலைவா படங்களில் வில்லனாக நடித்த நடிகர் அபிமன்யூ சிங், அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அநேகமாக அது வில்லன் வேடமாக தான் இருக்கும் என நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய இணைப்புகள்

Director siva actor rajini kanth Annaatthe movie update

People looking for online information on Annaatthe, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.