திடீர் சந்திப்பு… தலையில் கைவைத்து இயக்குனர் ஷங்கரை ஆசிர்வதித்த தயாரிப்பாளர் - VIRAL PIC!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கர் ஜெண்டில்மேன் படத்தின் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோனை சந்தித்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Director Shankar met K T Kunjumon and got blessings
Advertising
>
Advertising

மன்மத லீலை ரிலீஸ் தாமதம்: "கடவுள் இருக்கார்".. வெங்கட் பிரபு பாணியில் தயாரிப்பாளர் ட்வீட்

பிரம்மாண்ட தயாரிப்பாளர்….

தமிழ் திரையுலகில் பிரமாண்ட படங்களைத் தயாரித்து அவற்றை பிரமாண்டமாக விளம்பரபடுத்துவதில் புகழ்பெற்று விளங்கியவர் மெகா தயாரிப்பாளர் ' ஜென்டில்மேன்' கே.டி.குஞ்சுமோன். 90 களில் அவர் தயாரித்த சூரியன், ஜெண்டில்மேன், காதலன், காதல் தேசம் மற்றும் ரட்சகன் ஆகிய படங்கள் அவற்றின் பிரம்மாண்ட தயாரிப்புக்காகவே பேசப்பட்டன.

ஷங்கரோடு ஜெண்டில்மேன் & காதலன்….

இயக்குனர் ஷங்கர் அறிமுகமான ஜெண்டில்மேன் படத்தை கேடி குஞ்சுமோன்தான் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அந்த படத்தில் அர்ஜுன் , மதுபாலா, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இன்றுவரை ரசிகர்களைக் கவர்ந்த ஒரு படமாக ஜெண்டில்மேன் உள்ளது.

ஜெண்டில்மேன் படத்துக்குப் பிறகு ஷங்கரின் அடுத்த படமான காதலன் படத்திலும் இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது. பிரபுதேவா, நக்மா, ரகுவரன் மற்றும் வடிவேலு நடிப்பில் உருவான இந்த படம் பாடல்களுக்காகவே பெரிதும் பேசப்பட்டது.  இந்த இரு படங்களும் அவர் தயாரிப்பில் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.

ஜெண்டில்மேன் 2

இந்நிலையில் சில ஆண்டுகளாக திரைத்துறையில் ஒதுங்கி இருந்த குஞ்சுமோன் தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். ஜெண்டில் மேன் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்க உள்ளதாகவும், அதன் ஆரம்பகட்ட பணிகளை துவக்கியுள்ளதாகவும் அறிவித்திருந்தார். இப்படத்தின் இயக்குநர், நடிகர், தொழில்நுட்ப குழுவினர் இன்னும் அறிவிகக்ப்படவில்லை. இசையமைப்பாளராக மரகதமணியும், கதாநாயகியாக நயன்தாரா சக்ரவர்த்தி என்ற புதுமுக நடிகையும் ஒப்பந்தமாகியுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இயக்குனர் ஷங்கரோடு சந்திப்பு…

இந்நிலையில் தற்போது குஞ்சுமோனை இயக்குனர் ஷங்கர் சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. தனது மகளின் திருமண வரவேற்பு விரைவில் நடக்க உள்ள நிலையில் அதற்காக அழைப்பிதழைக் கொடுக்க ஷங்கர் தன் மனைவியோடு குஞ்சுமோனை சந்தித்துள்ளார். அழைப்பிதழைப் பெற்றுக்கொண்ட குஞ்சுமோன் ஷங்கரின் தலைமேல் கைவைத்து அவரை ஆசிர்வாதம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பீஸ்ட் செட்டில் இருந்து முதல்முறை வெளியான யோகிபாபுவின் வைரல் BTS புகைப்படம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Director Shankar met K T Kunjumon and got blessings

People looking for online information on Director shankar, Director Shankar met K T Kunjumon, Gentleman, K T Kunjumon, Kaadhalan will find this news story useful.