பெரும் சோகம்!! இயக்குநர் ஷங்கரின் தாயார் சென்னையில் காலமானார்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைத்துறையில் அடுத்தடுத்து நிகழும் மரண சம்பவங்கள் அனைவரையும் தொடர்ச்சியாக கண்கலங்க வைக்கின்றன. 

அண்மையில் இயக்குநரும் இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் தன் மனைவி மணிமேகலையை இழந்தார். அதாவது இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜியின் தாயாரான மணிமேகலை உயிரிழந்தார். 

இதேபோல் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தனது மனைவி சிந்துஜாவை கொரோனா தொற்று காரணமாக பரிதாபமாக இழந்தார். இதனை அடுத்து இவர்களின் மறைவுக்கு திரையுலகம் இரங்கல் தெரிவித்து வந்தது. 

இப்படி திரைப்பிரபலங்கள் மட்டுமல்லாது, திரைப் பிரபலங்களின் நெருங்கிய சொந்தங்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் பலரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் தான் இயக்குநர் ஷங்கரின் தாயார் உயிரிழந்துள்ளார். 

ஆம், இயக்குநர் ஷங்கரின் தாயார் எஸ்.முத்துலக்‌ஷ்மி சென்னையில் இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 88. இயக்குநர் ஷங்கரின் தாயாரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.  

ALSO READ: அடடா!! இப்படி ஒரு நண்பரா?.. கொரோனாவை வென்ற வசந்த பாலனின் நெகிழ வைக்கும் பதிவு!

Tags : Shankar

தொடர்புடைய இணைப்புகள்

Director Shankar lost his mother muthulakshmi at 88

People looking for online information on Shankar will find this news story useful.