இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போ? இயக்குனர் ஷங்கர் சொன்ன அதிரடி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் புதிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

கடந்த 1996-ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன். இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வந்தது.

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா மற்றும் பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத்  இசையமைக்கிறார்.

ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. பின் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடித்தார். விக்ரம் படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விக்ரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் இந்தியன் 2 படம் மீண்டும் துவங்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றன என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் (24.08.2022) துவங்கி உள்ளது என இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Director Shankar Kamal Haasan Indian 2 Shooting Update

People looking for online information on Indian2, Kamal Haasan, Shankar will find this news story useful.