தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்கள் இயக்கும் படங்கள், ஃபிரேம்கள், லொக்கேஷன்கள் தொடங்கி பல விஷயங்களில் தனித்துவமாக அவர்களின் முத்திரையுடன் விளங்கும்.

அப்படி தனித்துவமாக படம் எடுப்பதில், மிக மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். இவரின் படங்கள் என்றாலே, இருட்டான காட்சிகள், Low Angle ஷாட்கள் என பல விஷயங்கள், சிறப்பம்சங்களாக கருதப்படும்.
அதே போல, மிஷ்கின் படத்தில் வரும் பின்னணி இசை கூட மிக மிக தனித்துவமான ஒன்று தான்.
தனித்துவம் வாய்ந்த மிஷ்கின்
அந்த வகையில், அவர் எடுத்த பல திரைப்படங்கள், முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிணாமத்தில் விளங்கி உள்ளது. மிஷ்கினின் படத்திற்கென இருக்கும் ரசிகர்கள் பட்டாளமும் அதிகம். சித்திரம் பேசுதடி தொடங்கி, சைக்கோ வரை அவர் இயக்கியுள்ள பல படங்கள், தமிழ் சினிமாவின் புதிய வெர்சனையும் காட்டி இருந்தது.
ஆண்ட்ரியாவின் 'பிசாசு 2'
இதனையடுத்து, அடுத்ததாக மிஷ்கின் இயக்கி உள்ள 'பிசாசு 2' படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில், விரைவில் திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இதன் டீசர் சமீபத்தில், வெளியிடப்பட்டிருந்த நிலையில், முழுக்க முழுக்க பயத்தை ஏற்படுத்தும் சில திகில் ஷாட்களும் இடம்பெற்றுள்ளது. டீசரைக் கண்ட பலரும், மிரண்டு போயுள்ளதையடுத்து, மிஷ்கினின் இயக்கத்தை பாராட்டியும் வருகின்றனர்.
பாராட்டிய ஷங்கர்
அந்த வகையில், பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கர், மிஷ்கினை அழைத்து பாராட்டியுள்ளார். பிசாசு 2 டீசருக்காக வாழ்த்துக்களைத் ஷங்கர் தெரிவிக்கவே, பதிலுக்கு நன்றியையும் மிஷ்கின் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி, சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்... https://behindwoods.com/bgm8