"மாநாடு" பார்த்துட்டு இயக்குனர் ஷங்கர் செய்த டிவிட்டர் விமர்சனம்! வைரலாகும் மாஸ் டிவீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு. இந்த Maanaadu 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்கியுள்ளார். இந்த படத்தை V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்தார். 

Advertising
>
Advertising

Time Loop பாணியில் அமைந்துள்ள மாநாடு படம் வியாழன் அன்று (25.11.2021) உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபல விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.  ரசிகர்க்ள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளது. சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தை பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் படம் பற்றிய தனது கருத்தை  டிவிட்டர் வழியாக அறிவித்துள்ளார். அதில் "வெங்கட்பிரபு படத்தை அற்புதமாக எழுதி இயக்கியுள்ளார் சிலம்பரசன்TR Rocks! SJ சூர்யா அற்புதம்! யுவனின் இசை உயர்வாக இருந்தது! அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிறந்த முறையில் டைம் லூப் படத்திற்கான அற்புதமான வேலையை செய்துள்ளன. தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய பொழுதுபோக்கு அனுபவம்!" என குறிப்பிட்டுள்ளார். 

வியாழக்கிழமை வெளியான இந்த படம் முதல் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 14 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்தார். இந்நிலையில் மூன்றாம் நாள் வசூலாக 8 கோடி ரூபாயை மாநாடு படம் வசூலித்துள்ளதாக சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். முதல் மூன்று நாட்களில் 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் வாகை சந்திரசேகர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன்,  மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Director Shankar Appreciates Maanaadu movie Cast & Crew

People looking for online information on Maanaadu, Shankar, Silambarasan TR, Venkat Prabhu will find this news story useful.