இயக்குநர் செல்வராகவன், அவர் இயக்கிய படங்களில் தனது மனதுக்கு நெருக்கமான படம் குறித்து பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படைப்புகள் மூலம் கவனத்தை ஈர்த்தவர் செல்வராகவன். இவர் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது. மேலும் இவரின் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடைசியாக இவர் சூர்யாவை வைத்து என்.ஜி.கே படத்தை இயக்கினார்.
இந்நிலையில் தற்போது செல்வராகவன், அவர் இயக்கிய படங்களில் மனதுக்கு நெருக்கமான படம் எதுவென்பதை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனது மனதுக்கு நெருக்கமான படம் தனுஷ் நடிப்பில் அவர் இயக்கிய மயக்கம் என்ன என தெரிவித்துள்ளார். உலக புகைப்பட தினத்தின் வாழ்த்து பதிவாக அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
Tags : Selvaraghavan, Dhanush, Mayakkam Enna