செல்வராகவன் உருக்கமான கடிதம் - ''உன்னை கிண்டல் செய்தனர், இரவெல்லாம் அழுதிருக்கிறாய்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனாக செல்வராகவன் 'துள்ளுவதோ இளமை' மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து இயக்குநராக தனது வித்தியாசமான கதை சொல்லும் விதம் மூலம் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.

குறிப்பாக 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' படங்களும் எப்பொழுது மீண்டும் திரையிடப்பட்டாலும், முதல் முறையாக வெளியாவது போல் திரையரங்குகளில் கூட்டம் அள்ளும். இந்த படங்களின் இரண்டாம் பாகங்களுக்கு ரசிகர்கள் மரண வெய்ட்டிங்.

.

சமீப காலமாக இயக்குநர் செல்வராகவன் சமூக வலைதளங்களில் பயங்கர ஆக்டிவ். இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சிறு வயது செல்வராகவனுக்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளார், அதில், ''அன்புள்ள செல்வா, 14 வயதில் உன் தோற்றத்தை பார்த்து இந்த உலகம் சிரித்தது. ஏனெனில் உன் கண் குறைபாடு காரணமாக .

எங்கே நீ சென்றாலும் உன்னையே பார்த்தனர். சிலர் கிண்டல் செய்தனர். ஒவ்வொரும் இரவும் அதனை நினைத்து நீ அழுதிருக்கிறாய்.  சில நேரங்களில் கடவுளிடம், ஏன் எனக்கு மட்டும் ? ஏன் என் கண்ணை எடுத்துக்கொள்ளக் கூடாது ?, ஆனால் கவலைப்படாதே செல்வா, சரியாக 10 வருடங்களுக்கு பிறகு நீ ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்குவாய். அது உன் வாழ்வை மாற்றும்.

அப்பொழுது உலகம் உன்னை பார்க்கும். ஆனால் இந்த முறை மரியாதையுடனும் போற்றுதலுடனும் பார்க்கும்.  அடுத்த பத்து வருடங்களில் தமிழ் சினிமாவின் வரலாற்றில் டிரெண்ட் செட்டரான கல்ட் கிளாஸிக் படங்களை உருவாக்கியிருப்பாய். மக்கள் உன்னை ஜீனியஸ் என்று அழைப்பார்கள். இப்பொழுது மக்கள் உன்னை பார்ப்பார்கள். ஆனால் உன் சிறுவயதில் கவலைக் கொள்ளச் செய்த கண்ணிற்காக அல்ல. நீ உருவாக்கிய படங்களின் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றிய ஒருவனை பார்ப்பார்கள்.

அதனால் தைரியமாக இரு. கடவுள், உன்னிடம் இருந்து விலை மதிக்க முடியாத ஒன்றை எடுத்துக்கொண்டால், அவர்  உன்னிடம் மிகுதியாக திருப்பி அளிப்பார். அதனால் உற்சாகமாக இரு. புகைப்படங்கள் எடுக்கும் போது சிரி ( நீ சிரித்துக்கொண்டிருக்கும் படியான புகைப்படங்களை எப்பொழுதும் பார்த்தது இல்லை) ஏனெனில் பின் நாட்களில் உன்னை அதிக புகைப்படங்கள் எடுக்கப்பட வேண்டியிருக்கும்.  உன்னை நேசி.  -  இயக்குநர் செல்வராகவன் (வயது 45)'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Director Selvaraghavan shares inspirational note on instagram | இயக்குநர் செல்வராகவன் புகைப்படம் பகிர்ந்து உருக்கமான பதிவு

People looking for online information on Instagram, Pudhupettai, Selvaraghavan will find this news story useful.