"பணம் கையில் வந்தால்தான் நிஜம்".. இயக்குநர் செல்வராகவனின் வைரல் போஸ்ட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள போஸ்ட் ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "LEO, லால் சலாம் போன்ற பட பெயர்களை மாத்தனுமா?".. தொல். திருமாவளவன் வைரல் பதில்!

செல்வராகவன்

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை இயக்கி ஹிட் இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன், கடைசியாக தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கிய செல்வராகவன், தற்போது மோகன்.ஜி இயக்கத்திலான பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். முன்னதாக பீஸ்ட், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களிலும் செல்வராகவன் நடித்திருந்தார். இதில் சாணி காயிதம் படத்தில் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.

பகாசுரன்

அண்மையில் வெளியான பகாசுரன் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் மோகன் ஜி, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி இருந்தார்.

இந்தப் படம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நட்டி, ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசிலையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்திருந்தார். இதில், இயக்குநர் செல்வராகவன் முதன்மைக் கதாபாத்திரத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக நடித்திருந்தார்.

போஸ்ட்

சமீப காலமாக செல்வராகவன் தனது வாழ்க்கை அனுபவங்களை பதிவுகளாக சோசியல் மீடியா பக்கங்களில் எழுதி வருகிறார். இந்த பதிவுகள் ரசிகர்களுக்கு மத்தியில் அவ்வப்போது வைரலாகவும் செய்யும். அந்த வகையில் தற்போது செல்வராகவன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

அந்த பதிவில்,"பணம் கையில் வந்தால்தான் நிஜம். அதற்கு முன் கனவு காணாதீர்கள். செலவுகளை திட்டமிட வேண்டாம்!! அனுபவம். தத்துவம் அல்ல" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த போஸ்ட் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | RRR : இந்த பாட்டுல இதே கெட்டப்ல ராஜமௌலி ஆடிருக்காரா?.. நடன இயக்குநர் பகிர்ந்த செம BTS

தொடர்புடைய இணைப்புகள்

Director selvaraghavan post about Money goes viral

People looking for online information on Selvaraghavan, Selvaraghavan post will find this news story useful.