பிரபல இயக்குனர் செல்வராகவன், செய்துள்ள ட்வீட் ஒன்று, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்கள் வரிசையில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள், காலம் தாண்டியும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறது.
கடைசியாக செல்வராகவன் இயக்கியிருந்த நெஞ்சம் மறைப்பதில்லை திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, தனது சகோதரர் தனுஷை வைத்து, 'நானே வருவேன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
நடிகையுடன் புத்தாண்டு கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட துருவ் விக்ரம்.. ரசிகர்கள் கேட்ட டவுட்
நடிப்பில் கவனம்
இயக்கத்தில் மட்டுமில்லாமல், சமீப காலமாக நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன். ராக்கி திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், 'சாணிக் காயிதம்' என்ற திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்துள்ளார்.
இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, முற்றிலும் வேறுபட்ட செல்வராகவ்ன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரை கண் முன் நிறுத்தியிருந்தது. சாணிக் காயிதம் மட்டுமில்லாமல், நெல்சன் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.
அதே போல, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய மோகன்.ஜி இயக்கத்தில், புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்கவும் செல்வராகவன் ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே, ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ட்விட்டரில் ஆக்டிவ்
இந்நிலையில், சமீப காலமாகவே, ட்விட்டர் பக்கத்தில் அதிகம் ஆக்டிவாக இருந்து வருகிறார் செல்வராகவன். அடுத்தவர்களுக்கு தொடர்ந்து ட்விட்டர் மூலம் அறிவுரை வழங்கி வரும் அவர், வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களைத் தெரிவித்தும் வருகிறார். அது மட்டுமில்லாமல், சமீபத்தில், சிம்பு நடிப்பில் வெளியாகியிருந்த 'மாநாடு' திரைப்படத்தை பார்த்து விட்டு, பாராட்டியும் ட்வீட் செய்திருந்தார்.
வாழ்க்கையில் மிக கொடுமை
இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'வாழ்க்கையில் மிகக் கொடுமை“ என்ன பாத்துக்க யாருமே இல்லையே” என்ற புலம்பல்தான். உங்களை எதற்கு “ஒருவர்" பார்த்துக் கொள்ள வேண்டும் ? அது மருத்துவமனையில் நோயாளியாய் இருப்பது போல.! உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அது கடவுளே உங்களை பார்த்துக் கொள்வது போல். !' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஜோடி செமயா இருக்கே.. மின்னல் முரளி டோவினோவுடன் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படம்
அப்டேட் கேட்கும் ரசிகர்கள்
இந்த ட்வீட்டிற்கு, நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே போல, தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகும், 'நானே வருவேன்' திரைப்படத்தின் அப்டேட் கேட்டும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.