இயக்குநர் சீனு ராமசாமி: தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சீனு ராமசாமி.
‘மாமனிதன்’
தற்போது சீனு ராமசாமி விஜய் சேதுபதி நடிப்பிலான ‘மாமனிதன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமனிதன்' படம், கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் இப்பட ரிலீஸ் தள்ளிப்போனது.
எனினும் இப்படத்தின் டீசர் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் அண்மையில் வெளிவரத் தொடங்கியதால், படத்தின் வெளியீட்டையும் விரைவில் எதிர்பார்க்கலாம். இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்க, இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளனர்.
‘இடிமுழக்கம்’
இதனிடையே இயக்குநர் சீனு ராமசாமி, அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், ‘இடிமுழக்கம்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் குறித்த விபரங்களும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓடிடி நிறுவனங்கள் வட்டி வசூலிக்கின்றன!
இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி, தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பரபரப்பான பதிவினை பதிவிட்டுள்ளார். அதில், “சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்று தள்ளி வெளியிட்டால் தயாரிப்பாளரிடம் தந்த அட்வான்ஸ்
தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன சில ஓடிடி நிறுவனங்கள்!” என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், “content based films தயாரிப்பாளர்கள் வளர்ந்தால்தானே ஓடிடி நிறுவனங்களுக்கு பெருமை.. கதை, படங்கள் வளரும்? புதியவர்கள் தழைப்பர்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சமீப காலமாகவே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இயக்குநர் சீனு ராமசாமியின் இந்த பதிவும் பரபரப்பாகி வருகிறது.