”பாசமுள்ள பிள்ளைகளே”…. பீஸ்ட் பற்றி முதல் முறை பேசிய SAC- வைரல் VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனரும் நடிகருமான எஸ் ஏ சந்திரசேகரன் விஜய்யின் பீஸ்ட் படம் பற்றி முதல் முறையாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

நாளை பீஸ்ட்….

மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய்யும், டாக்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் நெல்சனும் பீஸ்ட் படத்தில் இணைந்துள்ளனர்.  இந்த படத்தில் விஜய்யோடு பூஜா ஹெக்டே, யோகிபாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.  முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன், நடித்துள்ளார். ஏப்ரல் 13 (நாளை) ஆம் தேதி பேன் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் வெளியாகிறது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பை அதிகாரித்த ப்ரமோஷன்கள்…

பீஸ்ட் படத்தில் இருந்து இதுவரை வெளியான அனைத்து ப்ரமோஷன்களும் ரசிகர்களைக் கவர்ந்தன. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன. அதுபோல இதுவரை வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. அரபிக்குத்து பாடல் யுடியூபில் 250 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனைப் படைத்துள்ளது. அதுபோலவே ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியான படத்தின் டிரைலர் டிரைலர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை பீஸ்ட் ரிலீஸாக உள்ளது.

பீஸ்ட் பற்றி SAC….


இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ரிலீஸை ஒட்டி விஜய்யின் தந்தையும். நடிகரும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகரன், டிவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ”பாசமுள்ள பிள்ளைகளே… பீஸ்ட் ரிலீஸ். உங்களை போலவே நானும் காத்திருக்கிறேன். ஒரு ரசிகனாக…. உங்களின் வெற்றிக் கொண்டாட்டத்தைக் காண ஆவலாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். சமீபகாலமாக விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக SAC கொடுத்த சில நேர்காணல்கள் பரபரப்பாக பேசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்காணலில் அப்பா பற்றி விஜய்….

சமீபத்தில் ஒளிபரப்பான சன் டிவி நேர்காணலான நேருக்கு நேர் நிகழ்ச்சியில் விஜய் அப்பாக்களைப் பற்றி பேசினார். அதில் ‘குடும்பம் என்பது ஒரு அழகான மரம் போன்றது. அதில் இருக்கும் பூக்கள் தெரியும். ஆனால் வேராக இருக்கும் அப்பா தெரிவதில்லை. கடவுளுக்கும் அப்பாவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம். நம்மளால கடவுள பாக்க முடியாது. ஆனா அப்பாவ பாக்கமுடியும்.’ என நெகிழ்ச்சியாக பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Director SA chandrasekaran talked about beast release

People looking for online information on Beast, S a chandrasekaran, Vijay will find this news story useful.