பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் 'கேப்மாரி'. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா, அதுல்யா ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் 70 வது படமாகும்.
இந்த படத்தில் சத்யன், தேவதர்ஷினி, விவிங்ஸ்டன், பவர் ஸ்டார், சித்தார்த் விபின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஜீவன் இந்த பாடலுக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தை கிரீன் சிக்னல் புரொடக்ஷன் சார்பாக எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இந்த படம் குறித்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஜெய் இருவரும் உரையாடினர். அப்போது நடிகர் ஜெய்யிடம் எப்படி நேரம் தவறாமல் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், ''நான் முதல் படத்தில் ஆக்டிங்கை விட, Punctuality தான் கத்துக்கிட்டேன்.
'பகவதி' படத்துல அண்ணா வந்து 567 நம்பர் உள்ள கார் வச்சுருந்தாரு. காலைல 8.30 மணிக்கு அவருக்கு டைம் சொல்லுவாங்க. 8.29 வரைக்கும் அவர் கார் உள்ள வராது. கரெக்டா 8.30க்கு உள்ள வருவாங்க. எல்லோரும் 567 வண்டி வருதுனு சொல்லுவாங்க. ஆன் டைம் வருவாரு.
நானும் இத பார்த்து ஃபாலோ பண்ணனும்னு நினச்சேன் சார். ஆனா சென்னை 28, சுப்பிரமணிய புரம் உள்ளிட்ட படங்கள் பண்ணும் போது எந்த டீம்ல இருந்து யார் கிரியேட் பண்ணாங்கனு தெரியல நான் கொஞ்சம் லேட்டா வருவேன். ஷூட்டிங் ஆன் டைம்க்கு வரமாட்டேன்'' என்றார்.