'மாநகரம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்த லோகேஷ், அதற்கடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
Images are subject to © copyright to their respective owners
இதன் பின்னர், கடந்த ஆண்டு லோகேஷ் இயக்கியிருந்த விக்ரம் திரைப்படம், அவரை வேறொரு லெவலுக்கு எடுத்து சென்றது. கமல்ஹாசன் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதே போல, நடிகர் சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமாகவும் விக்ரம் உருவாகி இருந்த சூழலில், லோகேஷின் அடுத்த திரைப்படம் குறித்து எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்திருந்தது.
இதனையடுத்து, நடிகர் விஜய்யை வைத்து 'லியோ' என்ற திரைப்படத்தை லோகேஷ் இயக்கி வருவதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. S.லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். மேலும் லியோ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதில் விஜய்யுடன் சஞ்சய் தத், த்ரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜுன், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தொடர்ந்து தற்போது காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.
Images are subject to © copyright to their respective owners
இந்த நிலையில், லியோ படத்தில் வசனம் எழுதும் பிரபல இயக்குனர் ரத்னகுமார், இந்த படம் பற்றி பேசியுள்ள விஷயம் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேயாதமான், ஆடை, குலுகுலு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள ரத்னகுமார், லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குனர் தீரஜ் வைத்தி ஆகியோருடன் சேர்ந்து வசனம் எழுதுகிறார்.
சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய இருந்த ரத்னகுமாரிடம் லியோ எப்படி இருக்கும் என்பது குறித்தும், எதிர்பார்ப்பு அளவு அதிகமாக இருப்பது பற்றிய கேள்வியும் முன் வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்தவர், "உங்க எதிர்பார்ப்பை பெருசா வச்சுக்கோங்க அதைவிட பெருசாதான் படமா இருக்கும்" என்றார்.
Images are subject to © copyright to their respective owners
அதே போல, லியோ படம் LCU -வில் வருமா என்ற கேள்விக்கும் பதிலளித்த ரத்னகுமார், "அது இன்னும் உங்களுக்கு சொல்லலைல்ல, சொல்லுவாங்க. இதை விட இன்னொரு 200 மைக் அதிகமா இருக்கும் போது சொல்லுவாங்க. இப்போதைக்கு அந்த படம் நல்லா வந்துட்டுருக்கு. ரிலீஸ் டேட் வேற சொல்லிட்டாங்க. இனிமே அப்டேட் கொடுக்கிறதுக்கு எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன்" என்றார்.