“ஹாரர், திரில்லர் வேணாம்னு முடிவு பண்ணோம்!”.. சித்தார்த்தை இயக்கிய நவரசா இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய திரைப்படங்களை இயக்கிவரும், முன்னணி இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத், விரைவில் Netflix-ல் வெளியாகவுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தில் 'இன்மை' பகுதியை இயக்கியுள்ளார்.

இந்த பகுதியில் சித்தார்த் மற்றும் நடிகை பார்வதி திருவோத்து இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்மை உருவாக்கம் குறித்து இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் கூறும்போது, “பயம் மட்டுமே அனைத்து உயிரனங்களுக்கும் பொதுவான பண்பு.

நீருக்கடியில் வாழும் உயிரனம் உட்பட, உலகின் அனைத்து உயிரினத்திற்கும் பயம் என்பது அடிப்படை உணர்வு. இந்த உணர்வை திரையில் காட்ட வழக்கமான ஹாரர் அல்லது திரில்லர் கதை கண்டிப்பாக வேண்டாம் என முடிவு செய்தோம்.

எதிர்பாரா நிகழ்வினால் உருவாகும் சோகமும் அதன் விளைவாக உருவாகும் பயத்தையும் கதையில் கொண்டு வந்தோம். நடிகர் சித்தார்த் அவர்களுடன் இக்கதை குறித்து விவாத்தித்த பொழுது, எனக்கும் அவருக்கும் எதிர்பாரா நிகழ்வுகள் மற்றும் ஷேக்ஸ்பியர் ஆகிய விஷயங்களின் மீது ஒரு பொது விருப்பம் இருந்ததை அறிந்தோம்.

எனது விருப்பமானது King Lear அல்லது Hamlet போன்ற கதையை எழுத வேண்டும் Othello அல்லது Macbeth போன்ற படைப்பை உருவாக்க வேண்டும் என்பது தான். இறுதியில், வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை சொல்லும் கதையைச் சொல்ல முடிவு செய்தோம். இது இன்மை பகுதியில் அழகாக வந்துள்ளது” என்றார்.



மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு 9 வெவ்வேறு கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படம் நவரசா.

Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். 9 இயக்குநர்கள் இந்த படத்தை இயக்கியுள்ளனர்.

"நவரசா" படம் Netflix தளத்தில் 2021 ஆகஸ்ட் 6 அன்று, பிரத்தியேகமாக 190 நாடுகளில் வெளியாகிறது.

Also Read: சேரன் தவறி விழுந்து தலையில் அடியா? Shooting-ல் விபரீதம்! அவரே சொன்ன பரபரப்பு விளக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Director Rathindran opens up navarasa inmai portion siddharth

People looking for online information on Navarasa, Siddharth will find this news story useful.