தளபதி விஜய்யை வைத்து 'திருமலை' என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குநர் ரமணா. அதனைத் தொடர்ந்து 'ஆதி', தனுஷ் நடித்த சுள்ளான் உள்ளிட்ட படங்களையும் அவர் இயக்கியிருந்தார். கேன்சரால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த அவர் தற்போது புதிய படம் இயக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

அவர் தற்போது Behindwoods TVக்கு பல்வேறு விஷயங்கள் குறித்த பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது 'திருமலை' படம் உருவான விதம் குறித்து பேசினார். அப்போது பேசிய அவரிடம் திருமலையில் ராகவா லாரன்ஸிடம் பைக் ரேஸில் தோற்கும் விஜய், தல என்று அவரை பார்த்து அழைத்து வசனம் பேசுவார். அது அஜித்தை நினைவுபடுத்தும் வகையில் அந்த வசனம் எழுதப்பட்டதா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ஆம். இருவருக்கும் இடையில் போட்டி இருக்கிறது. எம்ஜிஆர் - சிவாஜி , ரஜினி - கமல் என அனைவரிடத்திலும் போட்டி இருக்கிறது. அதே போலத்தான்அஜித்தும், விஜய்யும். அந்த போட்டியை இருவரும் ஆரோக்கியமாகத் தான் எடுத்துக்கொள்கிறார்கள். வெளியில இருக்குறவங்களுக்கு அது போர் மாதிரி தெரியும். ஆனா அந்த செயல்பாடு தான் அழகு.
இன்னைக்கு ஜெய்ப்பவன் நாளைக்கு தோத்துடுவான். ஆனால் அதில் இருப்பது நட்பு. அத சொல்வதற்கு தான் அந்த சீன் வைத்திருந்தேன். என்றார். அவர்கள் நல்ல நண்பர்கள். எனக்கு தனிப்பட்ட முறையில் இருவரையும் நன்றாக தெரியும். அவர்களுக்கு அந்த போட்டி இல்லை. என்றார்.