பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது அடுத்தப்படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராம் கோபால் வர்மா. இவரது திரைப்படங்கள் பாலிவுட்டிலும் சூப்பர் ஹிட் அடித்தன. மேலும் இவர் நடிகர் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது தியேட்டர்கள் இயங்காமல் இருக்கும் நேரத்தில், ராம்கோபால் வர்மா தனது OTT Platform மூலம் தொடர்ந்து திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் அண்மையில் க்ளைமாக்ஸ், நேக்கட் உள்ளிட்ட படங்களை இவ்வாறு ரிலீஸ் செய்தார்.
இந்நிலையில் தற்போது தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், ''எங்கள் அடுத்தப்படத்தின் கதாநாயகி இவர்தான். அப்சரா ராணி. இத்திரைப்படத்திற்கு த்ரில்லர் என பெயர் வைத்திருக்கிறோம். க்ளைமாக்ஸ், நேக்கட் படங்களின் வெற்றியை தொடர்ந்து, இத்திரைப்படம் உருவாகவுள்ளது. இதையடுத்து இத்திரைப்படம் விரைவில் அவரின் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.