பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் இயக்கியுள்ள படம் 'கிளைமேக்ஸ்'. இந்த படத்தில் மியா மல்கோவா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படம் இன்று (06/06/2020) இரவு 9 மணிக்கு Shreyas ET என்ற ஆப்பில் வெளியாகவிருக்கிறதாம். இந்நிலையில் இந்த படம் குறித்து பல்வேறு விஷயங்கள் குறித்தும் இயக்குநர் ராம் கோபால் வர்மா Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது ஹீரோயின் மல்கோவா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ''நான் போர்ன் மூவிஸ் பார்ப்பேன். மியா மல்கோவாவின் வீடியோஸ் முதலில் பார்ப்பேன். இந்த படம் பாலைவனத்தில் நடக்கக்கூடிய ஒரு ஹாரர் படம். அமெரிக்க பெண் தனது காதலருடன் அங்கே வருகிறார் என்பது கதை. அவரது வீடியோக்களை பார்த்து இந்த வேடத்துக்கு அவர் சரியாக பொறுந்துவார் என்று தோன்றியது'' என்று கூறினார்.