"எவ்ளோ பேர் கஷ்டத்துல இருப்பாங்க?"… "போன் பண்ணி கேட்ட ரஜினி” – ஆர்.வி.உதயகுமார் உருக்கம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஆர் வி உதயகுமார் ’சிட்தி’ பட ஆடியோ விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா காலத்தில் திரைத்துறையினருக்கு செய்த உதவி பற்றி பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising


மூத்த இயக்குனர்….

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் ஆர் வி உதயகுமார். இவர் இயக்கத்தில் உருவான கிழக்கு வாசல், பொன்னுமணி, சின்னக்கவுண்டர், எஜமான் மற்றும் சிங்கார வேலன் போன்ற படங்கள் வெற்றி பெற்று அவரை முன்னணி இயக்குனராக்கின. திரைப்படங்களை இயக்குவதோடு தனது படங்களில் தொடர்ந்து பாடல்களையும் எழுதி கவனத்தை ஈர்த்தவர் ஆர் வி உதயகுமார்.

சிட்தி ஆடியோ  விழா…

சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக  திரு.மகேஷ்வரன் நந்தகோபால் அவர்கள் தயாரிப்பில்  தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம்  திரில்லராக  உருவாகியிருக்கும்  படம் 'சிட்தி' ( SIDDY ).இந்த படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் நடந்தது. அதில் தயாரிப்பாளர் ராஜன், இயக்குனர் ஆர் வி உதயகுமார் மற்றும் பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். இதில் மூத்த இயக்குனரானர் ஆர் வி உதயகுமாரின் பேச்சு ரசிகர்களைக் கவரும் விதமாக அமைந்துள்ளது.

ரஜினியின் உதவி பற்றி பேசிய இயக்குனர்….

இந்த நிகழ்ச்சியில் பல விஷயங்களப் பேசிய ஆர் வி உதயகுமார், கொரோனா பெருந்தொற்று காலத்தில் நடிகர் ரஜினி திரைத்துறையினருக்கு செய்த உதவிகள் பற்றி பேசினார். அவரது பேச்சில் ‘ தயாரிப்பாளர் ராஜன் ஹீரோக்களை திட்டுகிறீர்கள். அது தவறு. கொரோனா காலத்தில் இயக்குனர் சங்கத்துக்கு ரஜினிகாந்த் போன் செய்து, எவ்வளவு பேர் கஷ்டத்தில் இருக்கீறீர்கள் என கேட்டார். நாங்கள் உறுப்பினர்கள் மொத்தம் 2500 பேர் இருக்கிறார்கள். அதில் 10 பேர்தான் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் என்றோம். அதைக் கேட்டு நீங்களே ஒரு தொகை சொல்லுங்கள் என்றார்.

அதே போல எழுத்தாளர் சங்கத்துக்கும் உதவி வேண்டும் என்று கேட்டோம்.  எழுத்தாளர் சங்கத்திற்கும் உதவினார்.’ எனக் கூறியுள்ளார். மேலும் விஜயகாந்த் பற்றியும் அவர் புகழ்ந்து பேசினார்.ஆர் வி உதயகுமார் ரஜினிகாந்த் நடிப்பில் எஜமான் என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


கொரோனா பெருந்தொற்று காலத்தில் மூத்த நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் ஆகியவர் திரைத் தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக நிதி உதவியும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களாகவும் அளித்து உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Director R V udhayakumar talked Rajini help in corona pandemic

People looking for online information on Corona, R V udhayakumar, Rajinikanth will find this news story useful.