படத்துல தான் ஒன்னு சேரல.. ஆனா FLAMES-ல்?? காதலே.. காதலே..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள்செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘96’ திரைப்படத்தில் ராம்-ஜானு கதாபாத்திரம் ரசிகர்கள் மனதை கவர்ந்தது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான ‘96’ திரைப்படம் பள்ளிப்பருவ காதல், நட்பை நினைவுப்படுத்தும் விதமாக உருவாகியிருந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த ராமசந்திரன்(ராம்), த்ரிஷா நடித்த ஜானகி தேவி(ஜானு) என்ற கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த படத்தில் இறுதி வரை ராம் ஜானு ஒன்று சேராதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குநர் பிரேம் குமார் தற்போது இயக்கி வருகிறார். இதில் ‘எங்கேயும் எப்போதும்’ நடிகர் ஷர்வானந்த் மற்றும் சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

96 படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் பிரேம் குமார் செய்த 90’ஸ் கிட்ஸ் செய்யும் சிறு பிள்ளைத்தனமான விளையாட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

90’s கிட்ஸ் எல்லோருக்கும் மிகவும் பிடித்த விளையாட்டான FLAMES வைத்து ராம்-ஜானு இடையேயான உறவை கண்டுபிடித்துள்ளார். ராமச்சந்திரன் - ஜானகி தேவி என்ற பெயரை எழுதி அதற்கு FLAMES போட்டு பார்த்ததில்,  L,A என்று கிடைத்தது. L என்றால் காதல், A என்றால் அன்பு என்று அர்த்தம்.

இது தொடப்ரான வீடியோ ஒன்றை இயக்குநர் பிரேம் குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Director Premkumar plays FLAMES for his iconic characters Raam and Jaanu of 96

People looking for online information on 96, 96 Telugu Remake, C Prem Kumar, FLAMES, Trisha, Vijay Sethupathi will find this news story useful.