விஜய்க்கு கதை சொன்னது உண்மையா.? LOVE TODAY இயக்குநர் பிரதீப் சொன்ன‌ பதில்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்க்கு கதை சொல்லியுள்ளது குறித்த கேள்விக்கு 'லவ் டுடே' படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பதில் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | காலில் காயம்.. சிகிச்சை எடுக்கும் பூஜா ஹெக்டே.. அவரே வெளியிட்ட வைரல் போட்டோ!

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி'. இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். காஜல் அகர்வால், யோகிபாபு, சம்யுக்தா, கே. எஸ் ரவிக்குமார், பொன்னம்பலம் என பலர் நடித்து இருந்தனர்.  காமெடி டிராமாவாக உருவான இந்த படத்தை விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டினர். வசூல் ரீதியாகவும் கோமாளி படம் வெற்றியடைந்தது.

கோமாளி படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி உள்ளார்.  நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி இப்படம் வெளியாகி உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இச்சூழலில் நேற்று மதியம் மதுரை சாத்தமங்கலத்தில் அமைந்துள்ள சினிப்பிரியா திரையரங்குக்கு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் வந்திருந்தார். மேலும் திரையரங்கினுள் ரசிகர்கள் மத்தியில் தோன்றி இருந்தார். பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரதீப் ரங்கநாதன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் குறிப்பாக "தளபதி விஜய்க்கு கதை சொல்லிருக்கீங்களா? அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க" என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், "ஆமா.. சொல்லிருக்கேன். இந்த டைம்ல அது குறித்து பேசினால் அதை வைத்து பப்ளிசிட்டி பண்ண பாக்குறேன்னு நினைச்சுப்பாங்க.  அதை இப்போ பேச வேண்டாம். படம் ஓடி முடிந்த பிறகு பேசலாம்" என பிரதீப் ரங்கநாதன் கூறினார்.

இந்த லவ் டுடே படத்தின் டைட்டில் கார்டில் நடிகர் விஜய்க்கு நன்றி கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 1997 ஆம் ஆண்டு வெளிவந்த லவ் டுடே படத்தில் நடிகர் விஜய், சுவலெட்சுமி, ரகுவரன் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | Kamal Haasan : பிறந்தநாள் நிகழ்வில் கமலுடன் நடனம் ஆடிய நடிகை பிந்து மாதவி.. Trending

தொடர்புடைய இணைப்புகள்

Director Pradeep Ranganathan Answer about Story Narration to Vijay

People looking for online information on Love today, Love Today Director Pradeep Ranganathan, Pradeep Ranganathan, Thalapathy Vijay, Vijay will find this news story useful.