'தொடரும் உயர்கல்வி நிறுவன படுகொலைகள்' - இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தன் படங்களின் சமூக ஏற்றத் தாழ்வுகளை பேசி வருபவர் இயக்குநர் பா.ரஞ்சித். இவரது ஒவ்வொரு படங்களும் வெளியாகும் போது சமூகத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில் ஐஐடி சென்னையில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், தொடரும் உயர்கல்வி நிறுவன படுகொலைகள். சமூகத்தில் இருக்கும் பல்வேறு தடைகளை தாண்டி,  கல்வியில் சாதிக்க பெரும் கனவுகளுடன் உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் மாணாக்களை, இப்படி சாதி மத வெறியில் பாகுபாடு காட்டி கொல்வது  தொடர்கதையாகிவிட்டது.

தொடரும் உயர்கல்வி நிறுவன படுகொலைகள். சமூகத்தில் இருக்கும் பல்வேறு தடைகளை தாண்டி,  கல்வியில் சாதிக்க பெரும் கனவுகளுடன் உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் மாணாக்களை, இப்படி சாதி மத வெறியில் பாகுபாடு காட்டி கொல்வது  தொடர்கதையாகிவிட்டது. என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Director Pa Ranjith Tweets about Student Fathima issue

People looking for online information on Fathima, Pa Ranjith, Suicide will find this news story useful.