”செம கமர்சியலாக இருக்கு”… இயக்குனர் பா ரஞ்சித் பாராட்டிய கபாலி நடிகரின் புதிய படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா.இரஞ்சித்தின் கபாலி , கஜினிகாந்த், குண்டு, வி1 பரியேறும்பெருமாள் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் லிங்கேஷ். தற்போது இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார்.

Advertising
>
Advertising

போடு சக்க.. வாடிவாசல் டெஸ்ட் ஷூட் ஃபோட்டோ பகிர்ந்த வெற்றிமாறன் பட நடிகர்!

லிங்கேஷ் நடிக்கும் காலேஜ் ரோட்

மாணவர்களின் கல்விக்கடன் அதன் பின்னால் இருக்கும் அரசியல் , சமூக பிரச்சினைகள் பற்றி திரில்லர் காமெடி கலந்த கதையமைப்போடு காலேஜ்ரோடு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். M P Entertainment  தயாரிப்பில் அறிமுக இயக்குனர்  ஜெய் அமர்சிங் இயக்கியிருக்கிறார். ஆப்ரோ இசையமைப்பில் கதைநாயகனாக லிங்கேஷ் நடித்திருக்கிறார்.  படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.விரைவில் திரைக்கு வரும் இந்தப்படத்தில் இசையமைப்பாளராக பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவில் பணியாற்றிய ஆப்ரோ இசையமைத்திருக்கிறார்.

பாராட்டிய பா ரஞ்சித்

இந்தபடத்தை சமீபத்தில் பார்த்த பா.இரஞ்சித் லிங்கேஷை  பாராட்டியிருக்கிறார். மாணவர்களின் கல்விக்கடன் குறித்த அரசியல் பேசினாலும் கமர்சியலாக இருக்கிறது , மாணவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று கூறி குழுவினருக்கு வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சியான காலேஜ்ரோடு குழுவினர் வெளியீட்டுக்கு தயாராகின்றனர்.

சமூகத்தின் அழுத்தத்தால் மனிதனின் இயல்பான காதலும், அதன் பொருட்டு நடக்கும் சிக்கல்களையும் உணர்வுப்பூர்வமாக பேசும் 'காயல்'. என்கிற படத்திலும் நாயகனாக நடித்துவருகிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் காயத்ரி , பாடகர் ஸ்வாகதா க்ரிஷ்ணன் , அணுமோல் நடித்துள்ளார்கள். இயக்குனர் தயமந்தி இயக்கத்தில் 'காயல்' படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று இறுதிக்கட்ட பணிகள்  நடைபெருகிறது. கதையின் நாயகனாக நடிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் இனி கதா நாயகனாக மட்டுமே நடிப்பீர்களா என்கிற கேள்விக்கு.

இப்படி இருக்கதான் ஆசை

நான் நடிகன் நடிக்க வந்திருக்கிறேன் .இதில் எந்த வேடம் கொடுத்தாலும் நடிப்பதுதான் நடிகனின் கடமை . இரண்டு படங்களில் கதா நாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தது நடித்தேன்.  வில்லன் வேடம் வந்தாலும் நடிப்பேன் . கதைதான் கதாபாத்திரங்களை தீர்மானிக்கிறது, அந்த கதாபாத்திரங்களில் நமக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அதைதான் இயக்குனர்கள் நமக்கு கொடுக்கப்போகிறார்கள், நமக்கு பொருத்தமானதாக இருக்கும்பட்சத்தில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன். மொத்ததில் நல்ல நடிகனாக இருக்கவேண்டும் அவ்வளவுதான் 'இயக்குனர்களின் நடிகனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்’ என்கிறார் லிங்கேஷ்.

ஒரே சூரியன்.. ஒரே இளையராஜா & பாரதிராஜாதான் – தெறிக்க விட்ட இசைஞானி!

தொடர்புடைய இணைப்புகள்

Director Pa Ranjith praised Lingesh acted college road movie

People looking for online information on இயக்குனர் பா ரஞ்சித், காலேஜ் ரோட், லிங்கேஷ், College road movie, Director Pa Ranjith, Lingesh, Pa Ranjith will find this news story useful.