LATEST: மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும பிசாசு-2 படத்தின் மிக முக்கிய அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2016-ல் இயக்குனர் பாலா தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் திரைப்பட விமர்சகர்கள்  மத்தியில்  நல்ல விமர்சனங்களை பெற்றது.

director mysskin pisasu 2 movie shooting update

பிசாசு முதலாம் பாகத்தின் வெற்றியைத்தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 'பிசாசு 2' திரைப்படம், ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து, நடிகர்கள் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி வருகிறது. 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

director mysskin pisasu 2 movie shooting update

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கலில் நடைப்பெற்று வந்த படப்பிடிப்பு கொரானா காரணமாக நின்றது. இப்போது தடைப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் திண்டுக்கல்லில் தொடங்கி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தபடத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் இந்த வாரத்துடன் நிறைவு பெறும் என தகவல்களை அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிசாசு படத்தின் படப்பிடிப்பு இறுதி நாளை எட்டிவிட்டதாக பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே பிசாசு-2 படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Director mysskin pisasu 2 movie shooting update

People looking for online information on Andrea, Mysskin, Poorna will find this news story useful.