இயக்குனர் மோகன் ஜி, பிரசித்தி பெற்ற சிவாலயத்தில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் இயக்குனர் மோகன்.G. ஜி.
இயக்குனர் மோகன் ஜி, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் "பகாசூரன்" படத்தை சமீபத்தில் இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது.
இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்திருந்தார். நட்டி, ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசிலையா ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்திருந்தார்.
சாம் CS இப்படத்திற்கு இசையமைக்க, பாரூக் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட GTM நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம், இயக்குனர் மோகன் ஜி-க்கு தங்க மோதிரம் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கினார். மேலும் படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
இந்த படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
பகாசூரன் படத்தை தொடர்ந்து ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் மோகன் ஜி அடுத்ததாக புதிய படத்தினை இயக்க உள்ளார். இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் சாமி உற்சவ மூர்த்தி பல்லாக்கை சுமந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை மோகன் ஜி பதிவிட்டுள்ளார்.