திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரான செல்வராகவன்….
தமிழின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகியுள்ளது. நடிகராக பிஸியாக இருந்தாலும் தனுஷுடன் நானே வருவேன் படத்தையும் செல்வராகவன் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா மற்றும் ஸ்விடீஷ் நடிகையான எல்லி அவ்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மோகன் ஜி இயக்கத்தில்…
இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்ஜள் வெளியாகி வந்தன. அதை இப்போது அதிகாரப்பூர்வமாக படத்தின் டைட்டிலோடு அறிவித்துள்ளனர். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன்.G. அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்கும் படத்திற்கு " பகாசூரன்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
பூஜையோடு வெளியான டைட்டில்…
இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை தற்போது சேலம் அருகில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் நடைபெற்றது. படப்பிடிப்பு திங்கள் முதல் நடைபெற உள்ளது. செல்வராகவன், நட்டி இணைந்து நடிப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பகாசூரன் என்பது மகாபாரதத்தில் வரும் ஒரு அரக்கனின் கதாபாத்திரமாகும். அதை படத்தின் தலைப்பாக வைத்திருப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.