"ராக்கி" பார்த்துட்டு மாரி செல்வராஜ் செய்த டிவிட்டர் விமர்சனம்! வைரலாகும் தெறி TWEET!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படம் தியேட்டர்களில் நேற்று (23.12.2021) ரிலீஸ் ஆகி உள்ளது.

Advertising
>
Advertising

சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ராக்கி படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அனைத்து உரிமையையும் நயன்தாரா விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்த படம் தியேட்டரில் வெளியான பின் விமர்சகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் இன்னும் பெரிய பாராட்டுக்களை பெற்று வருகிறது. வன்முறையை அழகியலுடன் காட்டியதாகவும், ஐரோப்பிய படங்கள் போல இருப்பதாகவும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ் டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். அதில் "இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நண்பர் வசந்த் ரவி நடிப்பில் வெளியாகியிருக்கும் “ராக்கி” பார்த்தேன் . மனித மனங்களின் எல்லையற்ற பழி உணர்ச்சியை பாசங்கற்ற ஒரு இருள் ஓவியமாக்கி வெற்றிபெற்றிருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்களும் ப்ரியமும்'' என குறிப்பிட்டுள்ளார். வசந்த் ரவி நடித்த தரமணி படத்தில் மாரி செல்வராஜ் உதவி இயக்குனாரக இயக்குனர் ராமிடம் பணியாற்றியவர் எனபது குறிப்பிடத்தக்கது . 

அருண் மாதேஸ்வரன் தற்போது, செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் வைத்து ‘சாணிக் காயிதம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படமும் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் 2011-ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கல்ட் அந்தஸ்து பெற்றுள்ள நியோ நொய்ர் வகைமையில் உருவான 'ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குனராக இருந்தவர். இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரியிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவர் சுதா கொங்கரா இயக்கிய  ‘இறுதிச்சுற்று’ படத்தில் வசன எழுத்தாளராகவும் பணியாற்றியவர்.

தொடர்புடைய இணைப்புகள்

Director Mari Selvaraj Appreciates Rocky Tamil Movie

People looking for online information on Arun Maatheshwaran, Rocky will find this news story useful.