லெஜெண்ட்ஸ் மீட்.. இயக்குநர் இமையம் பாரதி ராஜாவை சந்தித்த மணிரத்னம்.. வைரல் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | “கோலங்கள்ல 7 வருசம்.. இப்ப எதிர்நீச்சல்..”.. சீரியலில் வரவேற்பு.. சத்யப்ரியா நெகிழ்ச்சி.!

பாரதி ராஜா

தமிழ் சினிமாவின் பல ஸ்டீரியோடைப்களை உடைத்து சுக்குநூறாக்கியவர் பாரதிராஜா. தேனியில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னைக்கு வந்தவர், கிராமங்களை நோக்கி சினிமாவை அழைத்துச் சென்றார். செம்மண் பூமியும், கிராமத்து வாசமும் பாரதிராஜாவினுடைய படங்களின் மையமாக அமைந்துவிட்டது.

இவரது முதல் படமான 16 வயதினிலே இன்றளவும் தமிழ் சினிமா கொண்டாடும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. இதனை தொடர்ந்து, காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள் என அவர் கொடுத்த படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் நடிப்பிலும் பாரதி ராஜா ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

லெஜெண்ட்ஸ் மீட்

இந்நிலையில் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநரான மணிரத்னம் இன்று பாரதி ராஜாவை சந்தித்திருக்கிறார். இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பாரதிராஜா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,"மணி என்னை சந்தித்தபோது" என குறிப்பிட்டுள்ளார். இதனுடன் வீடியோ ஒன்றையும் பாரதிராஜா பகிர்ந்துள்ளார். அதில் மணிரத்னத்திற்கு பொன்னாடை போர்த்துகிறார் பாரதி ராஜா. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

கல்கி எழுதிய புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | "வெள்ளிக்கிழமை அதுவுமா".. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த 'லால் சலாம்' படத்தின் BTS PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Director Maniratnam Met Bharathiraja video Goes Viral among fans

People looking for online information on Bharathiraja, Mani Ratnam, Maniratnam Met Bharathiraja will find this news story useful.