மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்தப்படம் குறித்து பதிவிட்டுள்ளார்.
![இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்த படம் | Director Lokesh Kanagaraj opens on his next directorial after vijays master இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்த படம் | Director Lokesh Kanagaraj opens on his next directorial after vijays master](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/director-lokesh-kanagaraj-opens-on-his-next-directorial-after-vijays-master-home-mob-index-1.jpg)
மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் இயக்கிய கைதி சூப்பர் ஹிட் அடித்தது. இவர் தற்போது விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தனது அடுத்தப்படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து இவர் வெளியிட்டுள்ள பதிவில், ''எனது அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நாளை மாலை ஆறு மணிக்கு, இந்த அறிவிப்பு வரும்'' என அவர் பதிவிட்டுள்ளார். லோகேஷ் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் ரஜினி அல்லது கமல் நடிப்பில் இருக்கலாம் என சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.