விஜய்யின் மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் புகைப்படம் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஷாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள், ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஹிட் அடித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த போட்டோவில் நடிகர்களுடன் சேர்ந்து படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் ஜெயில் காஸ்ட்யூமில் இருக்கிறார். ஷிமோகாவில் ஜெயில் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, லோகேஷும் அந்த காஸ்ட்யூமில் இந்த போட்டோவை எடுத்து கொண்டாராம். பிரபல இயக்குநர்கள் அவர்களின் படங்களில் சிறிய கேமியோ காட்சியில் வருவது போல லோகேஷும் தோன்றினால், நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.