“டில்லி MEETS ரோலக்ஸ்?... இந்த UNIVERSE-அ உருவாக்குனதே..” லோகேஷ் சொன்ன EXCITING தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள சமீபத்தைய நேர்காணலில் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

விக்ரம் வெற்றி…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி  ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.


கடந்த சில ஆண்டுகளில் வெளியான தமிழ்ப் படங்களில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது விக்ரம். தமிழ் மட்டும் அல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் வெளிநாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

லோகேஷ் cross overs

விக்ரம் திரைப்படத்தில் கைதி படத்தின் சில கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த cross over ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதுபோல படத்தின் இறுதியில் வரும் சூர்யா கதாபாத்திரமான ரோலக்ஸும் பெரிய அளவில் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் அடுத்தடுத்து தான் இயக்கும் படங்களில் இந்த கதாபாத்திரங்கள் சந்தித்துக்கொள்ளும் தருணங்கள் அமையும் என லோகேஷ் கூறியுள்ளார்.

டில்லி ரோலக்ஸை எதிர்கொள்வாரா?

இந்நிலையில் சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது “டில்லி ரோலக்ஸை சந்திப்பது போல உங்கள் அடுத்த படங்களில் காட்சிகள் இருக்குமா” என்று கேட்கப்பட்ட போது “கண்டிப்பாக இருக்கும். இந்த யூனிவர்ஸ உருவாக்குனதே அதுக்குதான். அடுத்த கட்டங்களில் இந்த கதாபாத்திரங்களை சந்திக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Director lokesh answer about dilli meets Rolex moment

People looking for online information on Dilli, Kaidhi, Karthi, Suriya, Vikram will find this news story useful.