'சிவகார்த்திகேயனின் டாக்டர் பட பாடலை பார்த்த இயக்குநர் கொடுத்த WOW ரிப்ளை.! - 'செம டிமான்ட் போல.'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இருந்து வெளியான செல்லம்மா பாடல் குறித்து பிரபல இயக்குநர் பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார். இதில் நடிகை ப்ரியங்கா, யோகி பாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

இந்நிலையில் டாக்டர் படத்தில் இருந்து செல்லம்மா எனும் பாடல் நேற்று வெளியானது. டிக்டாக் தடையை வைத்து சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இந்த பாடலுக்கு, நகைச்சுவான மேக்கிங் வீடியோ வெளியிட்டனர் படக்குழுவினர். சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் திலிப்குமார் உள்ளிட்டோர் கலக்கும் இந்த ஜாலி வீடியோ இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து இந்த பாடலை பார்த்த இயக்குநர் கே.வி.ஆனந்த், பாடலை வெகுவாக பாராட்டி பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''தரமான அனிருத், கலக்கல் சிவகார்த்திகேயன், அப்புறம் இயக்குநர் நெல்சன், ஒரு சைலன்ட் வெடி. நீங்கள் என் படத்தில் நடிக்க தயாரா.?!" என பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

சிவகார்த்திகேயன் அனிருத் பாடலுக்கு கே.வி.ஆனந்த் கொடுத்த ரிப்ளை | Director KV Anand tweets about Sivakarthikeyan anirudh nelson's Doctor Chel

People looking for online information on Anirudh Ravichander, Chellama Song, Doctor, KV Anand, Nelson Dilipkumar, Sivakarthikeyan will find this news story useful.