VIDEO: தகனத்துக்காக பெசண்ட் நகர் கொண்டு செல்லப்பட்ட கே.வி.ஆனந்த் உடல்.. பிரபலங்கள் அஞ்சலி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா, ஜீவா, தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப்படங்களை கொடுத்த கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

54 வயதில் மாரடைப்பால் மரணமடைந்த கே.வி.ஆனந்த் உடல் சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் வீட்டுக்குள் உடல் கொண்டு செல்லப்படாமல், சில நிமிடங்கள் மட்டுமே குடும்பத்தினர் மற்றும் உறவினர் பார்வைக்காக வீட்டுக்கு வெளியிலேயே ஆம்புலன்சிலேயே வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த ஆம்புலன்ஸ் நேராக பெசன்ட் நகரிலுள்ள தகனம் செய்யப்படும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரகனி, இயக்குநர் பாலா உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்கள் நேரில் சென்று மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இயக்குநர் கே.வி.ஆனந்த் அயன், கோ, மாற்றான், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். பிரபல திரைப்பட இயக்குநராக மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளராகவும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார் கே.வி.ஆனந்த். குறிப்பாக ஷங்கர் இயக்கிய பாய்ஸ், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: "இன்னும் எவ்வளவு தாங்குவது இறைவா!".. கே.வி.ஆனந்த் மறைவுக்கு பிரபலங்களின் உருக்கமான இரங்கல்கள்!

Director KV Anand corpse taken Basant nagar funeral directly

People looking for online information on K.V.Anand, KV Anand, RIPKVAnand will find this news story useful.