கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்ட்ராங்கான கருத்தை முன் வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக அறியப்படுபவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் தொடக்கத்தில் இயக்கிய பிசா, ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினி நடிப்பில் பேட்ட திரைப்படத்தை இயக்கி இவர், தற்போது தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து விக்ரம், த்ருவ் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கிறார்.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்ட்ராங்கான கருத்தை முன் வைத்துளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் விடுதலை குறித்து தொடர்ந்து பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள பதிவில், ''செய்யாத குற்றத்திற்காக பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 வருடங்கள் ஆகிறது. 30 வருடங்களை தாண்டியும் ஒரு அம்மாவின் போராட்டத்திற்கு நீதி கிடைக்கவில்லை. பேரறிவாளன் ரிலீஸ் செய்யப்பட வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள பென்குயின் திரைப்படம், ஒரு மகனை தேடும் தாயின் பயணத்தை மையப்படுத்தி உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இத்திரைப்படம், அமேசான் தளத்தில் வெளியாகவுள்ளது.