"என்னோட படத்தை ரிலீஸ் பண்ணி கொடுங்க எலான் மஸ்க்".. கோரிக்கை வைத்த இயக்குனர்! வைரலான போஸ்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் நரேன்.

Advertising
>
Advertising

Also Read | "டாக்டர்" பட பிரியங்கா மோகன், அடுத்து நடிக்கும் படத்தில் இந்த முன்னணி ஹீரோவுக்கு ஜோடியா?

தனது முதல் படமான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று நம்பிக்கைக்குரிய இயக்குனராக அறியப்பட்டவர். "துருவங்கள் பதினாறு" படத்தின் வெற்றிக்குப் பிறகு "நரகாசூரன்" என்கிற படத்தை இயக்கினார். பல்வேறு காரணங்களால் திரையரங்குகளில் வெளிவர முடியாமல் உள்ளது.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி உள்ள இந்த "நரகாசூரன்" திரைப்படத்தில் அரவிந்த்சாமி, இந்திரஜித், ஸ்ரேயா, சுதிப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் எடிட்டர் ஸ்ரீஜித் சரண் படத்தின் திரை புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு படம் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.  இந்த "நரகாசூரன்" திரைப்படம், விரைவில் பிரபல OTT - ல் இப்படம் வெளியாகும் என நம்பதகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில் கார்த்திக் நரேன் இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். அதில், யோ எலான் மஸ்க், நீ மார்ஸ் கிரகத்துக்கு போறதுக்குள்ள நரகாசூரன் படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணிடு... உனக்கு புண்ணியமா போவும்" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது செம்ம வைரலாகி வருகிறது.

எலான் மஸ்க், டிவிட்டர் சமூக வலைதளத்தை சுமார் 44 பில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்ற உள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

"என்னோட படத்தை ரிலீஸ் பண்ணி கொடுங்க எலான் மஸ்க்".. கோரிக்கை வைத்த இயக்குனர்! வைரலான போஸ்ட் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Director Karthick Naren Request to Tesla Elon Musk

People looking for online information on Director Karthick Naren, Director Karthick Naren Request to Elon Musk, Elon Musk will find this news story useful.