"லோகேஷ் கிட்ட இதுதான் பெரிய ப்ளஸ்".. தளபதி 67 பற்றி H.வினோத் EXCLUSIVE..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஹெச். வினோத், நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனல் நடத்திய ரசிகர்கள் திருவிழாவில் கலந்து கொண்டார்.

Advertising
>
Advertising

சதுரங்கவேட்டை படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் கால் பதித்தவர் H.வினோத். அதன்பிறகு, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை வினோத் இயக்கி இருந்தார். சமீபத்தில் H.வினோத், அஜித் நடிப்பில் துணிவு படத்தை இயக்கியுள்ளார்.

வங்கிகள் மற்றும் பங்கு சந்தை தொடர்பான  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023) அன்று  திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் H. வினோத் Fans Festival என்ற நிகழ்ச்சியில் இயக்குனர் வினோத் கலந்து கொண்டார். அப்போது, பல விஷயங்கள் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் மற்றும் வினோத் இருக்கும் புகைப்படம் திரையிடப்பட்டது. அப்போது இவருடைய நட்பு பற்றி கேள்வி எழுந்தது. அதற்கு பதில் அளித்த H.வினோத்," நானும் லோகேஷும் ஒரே இடத்துல வேலை பார்த்தோம். அதுனால பல விஷயங்கள் பேசிப்போம். உதாரணத்துக்கு விஜய் சார்-கிட்ட கதை சொல்லனும்னா அதை பத்தி அவர்கிட்ட கேட்பேன். அவரும் என்னோட படம் பத்தி கேட்பாரு. பொதுவா மீட் பண்ணும்போது சில மணிநேரங்கள் ஜாலியா பேசுவோம்" என்றார்.

தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில்,"லோகேஷ் கிட்ட இருக்க பெரிய ப்ளஸ் அவரோட டீம். அவர் என்ன நினைக்கிறாரோ அதை கன்வெர்ட் பண்ணிக்கொடுக்குற டீம் அவர்கிட்ட இருக்கு. மணிரத்னம் - பிசி ஸ்ரீராம் சார் டீம் இருக்கு இல்லையா? அந்த மாதிரி லோகேஷ்கிட்ட ஒரு டீம் இருக்கு. அதுதான் அவரோட பெரிய ப்ளஸ்" என்றார்.

இதனையடுத்து, லோகேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 67 குறித்து H. வினோத் பேசுகையில்,"அவரோட (லோகேஷ்) முகத்தை பார்த்தாலே தெரியலையா எவ்வளவு கடினமா உழைக்கிறாருன்னு. எவ்வளவு அழகா ஸ்வீட்டா இருந்தவரு. உண்மையாவே கடினமா உழைக்கிறாரு-ன்னு நினைக்கிறேன். கண்டிப்பா அந்தப்படம் பெருசா வரும்" என்றார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Director H.Vinoth Exclusive about T67 and Lokesh kanagaraj

People looking for online information on H.Vinoth, Lokesh Kanagaraj, T67, Thunivu will find this news story useful.