"நல்ல படமா எடுத்துருக்காங்க".. DADA படம் பார்த்த பின் H. வினோத் சொன்ன REVIEW!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

“டாடா” படம் பார்த்த பிறகு இயக்குனர் H. வினோத் படம் குறித்து பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | திருமண நாளில் மகேஷ் பாபு குறித்து பதிவிட்ட நம்ரதா.. என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க

காதல் திரைப்படமாக டாடா திரைப்படம் இன்று பிப்ரவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார்  தயாரிப்பில் 'டாடா' படத்தினை அறிமுக இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  கவின் மற்றும் அபர்ணா தாஸூடன்  K.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரிஷ்,  பிரதீப் ஆண்டனி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார், கதிரேஷ் அழகேசன், எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார், சண்முக ராஜ் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தின் சிறப்புக் காட்சி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் சமீபத்தில் நடந்தது. இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இயக்குனர் சுசீந்திரன், பாவனி, அமீர், இயக்குனர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Images are subject to © copyright to their respective owners.

திரைப்படம் முடிந்த பிறகு படம் குறித்து இயக்குனர் வினோத் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, "முதலில் இயக்குனருக்கு பெரிய வாழ்த்துகள். கிரைம், ஆக்சன் மாதிரி எளிதாக ஒரு படம் எடுக்காமல் நல்ல கதையை அழகா ரொம்ப நல்லா படம் எடுத்து இருக்காங்க. இந்த படம் பெருசா ஜெயிக்கனும் வாழ்த்துகள். அம்பேத் சாருக்கும் கவினுக்கும் இந்த படம் பெருசா வெற்றி பெற வேண்டும்.". என வினோத் கூறினார்.

Also Read | "ஒன்றரை வாரம் என்னை கதறி கதறி அழ வெச்சாங்க".. அசிம் முன் புலம்பிய Housemate!!.. என்ன நடந்துச்சு?

"நல்ல படமா எடுத்துருக்காங்க".. DADA படம் பார்த்த பின் H. வினோத் சொன்ன REVIEW! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Director H Vinoth Talks about Kavin Dada Movie

People looking for online information on Dada, Dada Movie, H Vinoth, H Vinoth about Dada Movie, Kavin will find this news story useful.