பாரதிராஜாவின் மருத்துவச் செலவு.. மருத்துவர்களுக்கு நன்றி சொன்ன மனோஜ் பாரதிராஜா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் பாரதிராஜாவை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், பாரதிராஜாவின் மகன் மனோஜ் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | 'வெந்து தணிந்தது காடு' கேரளா ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய 'விக்ரம்' வினியோகஸ்தர்! போடு வெடிய

தமிழ் சினிமாவின் திசைவழிப் போக்கை மாற்றிய இயக்குனர்களில் மிக முக்கியமானவர் பாரதிராஜா. 'இயக்குனர் இமயம்' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், சத்யராஜ் ஆகியோரை வைத்து தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படங்களை இயக்கியவர்.

சமீப காலங்களில் தொடர்ச்சியாக திரைப்படங்கள் நடித்து வரும் பாரதிராஜா, இளம் இயக்குனர்கள் இயக்கிய பாண்டியநாடு, குரங்கு பொம்மை, ஈஸ்வரன், ராக்கி, கென்னடி கிளப் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ்க்கு தாத்தாவாக 'சீனியர் திருச்சிற்றம்பலம்' கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

பாரதிராஜா, கடந்த ஆகஸ்டு 23ஆம் தேதி தனது 80வது பிறந்தநாளை  கொண்டாடினார். இந்நிலையில் திடீரென உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

டாக்டர் நடேசன், பாரதிராஜாவின் மனைவி, மகன், மகள், தம்பி, கவிஞர் வைரமுத்து ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும் எம்.ஜி.எம் மருத்துவமனையில், இதன் தலைவர் மற்றும் டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில், மேல் சிகிச்சைக்காக சில நாட்களுக்கு முன் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். இதற்கான ஏற்பாடுகளையும் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் ஏ.சி .சண்முகம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார். இதனை முன்னிட்டு மனோஜ் பாரதிராஜா மருத்துவமனை வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

மனோஜ் பாரதிராஜா பேசியது: "ஒரு இக்கட்டான சூழலில் மருத்துவமனையில் அனுமதித்தோம். இப்போது சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார். பழைய பாரதிராஜாவை பார்க்கலாம்.  

அப்பாவிற்கு நுரையீரலில் கொஞ்சம் பிரச்சனை. வைரமுத்து, சி.வி. சண்முகம் ஆகியோரின் ஆலோசனைப்படி இந்த மருத்துவமனைக்கு வந்தோம்.  சிகிச்சையளித்த எல்லா மருத்துவர்களும் எங்களுக்கு கடவுள் தான். சிகிச்சைக்கான மொத்த செலவும் எனது வங்கிக்கணக்கில் இருந்து மட்டுமே செலுத்தப்பட்டது.   அவருக்கு எல்லாமே சினிமா தான். சினிமாதான் அவருடைய மூச்சு சுவாசம். மீண்டும் 'திருச்சிற்றம்பலம்' படம் பார்க்க வேண்டும் என அப்பா கேட்டார்." என மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார் ‌.

Also Read | Suriya 42: சூர்யா - திஷா நடிக்கும் புதிய படத்தில் இணைந்த பிரபல டெக்னீசியன்.. வேற லெவல் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Director Bharathiraja Son Manoj Bharathi Pressmeet Speech

People looking for online information on Bharathiraja, Bharathiraja health condition, Manoj Bharathi Pressmeet, Manoj Bharathiraja will find this news story useful.