தமிழ் சினிமா துறையினருக்கு பாரதிராஜாவின் முக்கியமான வேண்டுகோள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமா துறையினரிடம் இயக்குநர் பாரதிராஜா முக்கியமான வேண்டுகோளை முன் வைத்துள்ளார். 

கடந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் எதிரொலித்தது. இதை தொடர்ந்து சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன, மேலும் தியேட்டர்கள் மூடப்பட்டன. தற்போது குறைந்த அளவிலான ஆட்களை மட்டுமே கொண்டு சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜா ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தற்போது படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இந்த கோவிட் சூழலால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் சிக்கியுள்ளனர். அதனால், 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தங்கள் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைத்து கொள்ள வேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

தமிழ் சினிமா துறையினருக்கு பாரதிராஜாவின் முக்கியமான வேண்டுகோள். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள் | Director bharathiraja request for tamil cinema actors and technicians

People looking for online information on Bharathiraja will find this news story useful.