மருத்துவமனையில் இருந்து பாரதிராஜா.. உடல்நிலை குறித்து அவரே வெளியிட்ட அறிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Advertising
>
Advertising

நீர்ச்சத்து குறைபாடு காரணமாக எம்.ஜி.எம் மருத்துவமனையில், இதன் தலைவர் மற்றும் டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில், மேல் சிகிச்சைக்காக நேற்று மதியம் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில் பாரதிராஜா, தனது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்  பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.

மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம். அன்புடன், பாரதிராஜா"  என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Director Bharathi Raja Health Condition Latest statement

People looking for online information on பாரதிராஜா, Bharathi Raja will find this news story useful.