இயக்குநர் பாரதிராஜா புதிய திரைப்படங்களை வெளியிடுவது குறித்து ஆவேசமாக பேசியுள்ளார்.
இன்று இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கான அலுவலக திறப்பு நடைபெற்றது. இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திரைப்படங்களை திரையரங்கத்தில் ரிலீஸ் செய்ய, எங்கள் தரப்பில் சில கோரிக்கைகளை வைத்துள்ளோம். அதற்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை என்றால், வேறு வழிகளை பார்க்க நாங்க தயங்கமாட்டோம் என அவர் கூறினார்.
மேலும் OTT தளங்களில் படத்தை ரிலீஸ் செய்வது பற்றி கேட்ட பொழுது, ''இது பொருள் கலைஞனுடையது. அதை அவன் எங்கு வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம். அதற்கான இலாபம் தியேட்டர்களில் கிடைத்தால், ஏன் வேறு தளத்திற்கு செல்ல போகிறோம். தமிழில் இப்போது 80-க்கும் மேற்பட்ட சிறிய படங்கள் தயாராக உள்ளன. அதை எல்லாம் முதலில் ரிலீஸ் செய்ய தியேட்டர் ஓனர்களால் முடியுமா..? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ.