OFFICIAL : பாலாவின் இயக்கத்தில் உருவான வர்மா.. ரீலீஸ் தேதி அறிவிப்பு. செம தகவல் இதோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பாலா இயக்கிய வர்மா திரைப்படத்தில் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பாலா. இவர் இயக்கிய சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் பெரிதும் கவர்ந்தன. இவர் நடிகர் த்ருவ் இயக்கத்தில் வர்மா திரைப்படத்தை இயக்கினார். ஆனால், இதில் சில கருத்து வேறுபாடுகள் உருவாக, வர்மா படம் ட்ராப் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதே திரைப்படம் ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டு ரிலீஸானது. 

இந்நிலையில் தற்போது பாலா இயக்கிய வர்மா திரைப்படம் ரிலீஸ் ஆவது குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. Simply South என்கிற OTT தளத்தில் இத்திரைப்படம் நேரடியாக ரிலீஸ் ஆகவுள்ளது. வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் இயக்குநர் பாலா மற்றும் த்ருவ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

பாலாவின் வர்மா ரிலீஸ் | Director Bala's Varma starring dhruv to release

People looking for online information on Bala, Dhruv, Varma, Varma Release will find this news story useful.