BREAKING: இயக்குனர் பாலாவுடன் நடிகர் சூர்யா இணையும் புதிய படத்தில் இவர் இருக்காரா? மாஸ் அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசியாக பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியான நாச்சியார் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது.

director bala actor suriya atharva movie next update

பின்னர் சியான் விக்ரமின் மகன் துருவை வைத்து தெலுங்கு அர்ஜூன் ரெட்டி ரீமேக்கான வர்மா திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் பல சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் பாலாவும் சூர்யாவும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பாலாவின் பரதேசி பட நாயகன் அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

director bala actor suriya atharva movie next update

இதில் கேமியோ ரோலில் சூர்யா நடிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தில் வெள்ளித்திரை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜி வசனம் எழுதுகிறார் என தவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ராதாமோகனிடம் வசனகர்த்தாவாக பணியாற்றியவர். இவர் சமீபத்தில் ஜோதிகாவின் 36 வயதினிலே, ஜெயம் ரவியின் அடங்கமறு படங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.  மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Bala, Suriya

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Director bala actor suriya atharva movie next update

People looking for online information on Bala, Suriya will find this news story useful.