ஸ்வீட் எடுங்க 😍.. அப்பாவான அட்லி.. மோஷன் வீடியோ வெளியிட்டு குழந்தை பிறப்பை அறிவித்த அட்லி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்'.. கர்நாடக மாநிலத்தின் முக்கிய நகரில் ஷூட்டிங்? தெறி அப்டேட்!

ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லிக்கு ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நான்கு படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.

தற்போது ஷாருக்கான் நடிக்கும்"ஜவான் " படத்தை அட்லி இயக்கி வருகிறார். இயக்கம் மட்டுமல்லாமல் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி  தயாரிப்பாளராகவும் அட்லி வலம் வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் முனைப்பிலும் ஒரு தயாரிப்பாளராக அவர் செயல்பட்டு வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இயக்குனர் அட்லி, தனது காதல் மனைவி நடிகை பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி கரம்பிடித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது.

Images are subject to © copyright to their respective owners.

இயக்குனர் அட்லி மற்றும் பிரியா அட்லி இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக பிரத்யேக ஃபோட்டோ ஷூட் நடத்தி சில நாட்களுக்கு முன் அறிவித்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் அட்லி & பிரியா தம்பதியருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை இயக்குனர் அட்லி பிரத்யேக மோஷன் வீடியோ & புகைப்படங்களை பகிர்ந்து டிவிட்டர் & இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  அறிவித்துள்ளார்.

Also Read | "21 வருசத்துக்கு முன்னாடி".. தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து இயக்குனர் மிஷ்கின் நெகிழ்ச்சி!

தொடர்புடைய இணைப்புகள்

Director Atlee Priya Blessed with baby boy

People looking for online information on Atlee, Atlee Priya, Atlee Priya Blessed with baby boy will find this news story useful.