‘அவன் ஒரு சின்ன விஜய் சேதுபதி..’- சூர்யா சேதுபதி பெர்ஃபார்மன்ஸ் பார்த்து வியந்த இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சிந்துபாத்’ திரைப்படத்தை கே புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் நடித்துள்ளார்.

முன்னதாக விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடி தான்’ படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், ‘சிந்துபாத்’ திரைப்படத்தில் அவரது நடிப்பு மற்றும் கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இயக்குநர் அருண்குமார் Behindwoods-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

அவர் பேசுகையில், ‘இந்த கதாபாத்திரம் சூர்யா சேதுபதியை மனதில் வைத்தே உருவாக்கினேன். ஆரம்பத்தில் அவனுக்கு நடிக்கும் எண்ணம் துளியும் இல்லை. பின் நிறைய பேசி அவரை சம்மதிக்க வைத்தேன். அவரது நடிப்பு மிகவும் எதார்த்தமாக உள்ளது. விஜய் சேதுபதியிடம் இருக்கும் ஸ்பாண்டேனிட்டி சூர்யாவிடம் அப்படியே இருக்கிறது. சிறுவன் என்பதால் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவதை பிக்னிக் வருவது போன்று ஜாலியாக இருப்பான். ஒரே நாளில் ஒட்டுமொத்த படத்தின் டப்பிங் பணியையும் சூர்யா முடித்துவிட்டான்’ என கூறியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியும், சூர்யா சேதுபதியும் இணைந்து அசால்ட்டாக ஆட்டய போடும் பெட்டி கேஸ் திருடர்களாக நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு குறிப்பிட்ட டெசிபல் அளவில் மட்டுமே காது கேட்கும், அதனால் நடக்கும் சுவாரஸ்யங்களும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றியும் இப்படத்தில் பேசப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இப்படம் வரும் ஜூன்.21ம் தேதி ரிலீசாகிறது. விஜய் சேதுபதியின் இந்த புதிய பரிமாணம் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அவன் ஒரு சின்ன விஜய் சேதுபதி..’- சூர்யா சேதுபதி பெர்ஃபார்மன்ஸ் பார்த்து வியந்த இயக்குநர் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Director Arun Kumar lauds Surya Vijay Sethupathi's performance in Sindhubaadh

People looking for online information on Anjali, Arun Kumar, Sindhubaadh, Surya Vijay Sethupathi, Vijay Sethupathi will find this news story useful.