சென்னை: அமீர் - வெற்றிமாறன் இணையும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
காதலர் தினத்தில் வெளியான ரொமாண்டிக் போஸ்டர்! இது தான் மாறன் படத்துல மாளவிகா மோகனன் பேர் போல!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன், பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ப்டங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தயாரிப்பாளராகவும் காக்கா முட்டை, உதயம் NH4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். 5 முறை தேசியவிருதை வாங்கியவர்.
இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள்' படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார். விடுதலைக்கு பிறகு சூர்யா நடிப்பில் வெற்றிமாறன், தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் "சி சு செல்லப்பா" அவர்கள் எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.
இதற்கிடையில் அதிகாரம் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி உள்ளார். இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இயக்குநர் அமீர் இணையக்கூடிய புதிய படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு "இறைவன் மிகப் பெரியவன்" என பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி 2 அன்று, இந்த படத்தின் அறிவிப்பின் போது “ஒரு திரைப்படம் தனி ஒருவரின் Vision தான். இன்னொருவரின் Vision-னுடன் இணையும்போது அது இன்னும் அழகாகும். எனது அடுத்த படைப்பு விரைவில் தொடங்கப்படவிருக்கிறது” என அமீர் கூறியிருந்தார். இந்த படத்திற்கு தங்கம், வெற்றிமாறன் இருவரும் கதை எழுத, அமீர் திரைக்கதை அமைத்து இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
ஏற்கனவே அமீர், வெற்றிமாறனுடன் வட சென்னை படத்தில் நடித்துள்ளார். மேலும் வாடிவாசல் படத்திலும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். தற்போது அமீர் சந்தனத்தேவன் படத்தை ஆர்யா நடிப்பில் உருவாக்கி வருகிறார். தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள மாறன் படத்திலும் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த புதிய படத்தை தொடர்ந்து சூரி நடிப்பில் ஒரு படத்தை அமீர் இயக்க உள்ளார்.
உள்ளாடை அணியாமல் பொது இடத்தில் நடமாடிய உலக அழகி.. சர்ச்சையான புகைப்படங்கள்