சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தை பார்த்து, பாராட்டித் தள்ளியுள்ளார் பிரபல மலையாள திரைப்பட இயக்குனர்.

நடிகர் சிம்பு, கடந்த சில ஆண்டுகளில், மிக குறைவான எண்ணிக்கைகளில் தான் திரைப்படங்கள் நடித்து வந்தார். 2019 ஆம் ஆண்டில், 'வந்தா ராஜாவா தான் வருவேன்' வெளியானது. இதன் பிறகு, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிம்பு நடிப்பில் 'ஈஸ்வரன்' திரைப்படம் வெளியாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் வெளியானது. பல்வேறு தடைகளுக்கு பின், இந்த படம் திரையரங்கில் வெளியானது. இதனையடுத்து, மாநாடு வெளியான நாள் முதலே, ரசிகர்கள் மற்றும் பொது மக்கள், அமோக வரவேற்பை வழங்கினார்கள்.
வாழ்க்கையிலேயே பெரிய கொடும இது தான்.. இயக்குனர் செல்வராகவன் செய்த ட்வீட்.. என்னவா இருக்கும்??
பாராட்டு மழை
டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை, அனைவருக்கும் புரியும் வகையில், படமாக்கி இருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. சிம்பு மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பும் அதிகம் பேசப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில், அனைவரையும் ஈர்த்த சிம்பு படமாக 'மாநாடு' உருவானது. அது மட்டுமில்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், செல்வராகவன் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் மாநாடு திரைப்படத்தை பார்த்து விட்டு, தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.
மிரண்டு போன அல்போன்ஸ் புத்ரன்
இந்நிலையில், இந்த வரிசையில் மலையாள திரைப்பட இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இடம் பிடித்துள்ளார். நேரம், பிரேமம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அல்போன்ஸ் புத்ரன், மாநாடு திரைப்படத்தை இன்று பார்த்துள்ளார். இதனைக் கண்டு மிரண்டு போன அவர், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.
நடிகையுடன் புத்தாண்டு கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட துருவ் விக்ரம்.. ரசிகர்கள் கேட்ட டவுட்
நடிப்பில் மிரட்டிய சிம்பு
மாநாடு திரைப்படம் பற்றிய அவரின் பதிவில், 'மாநாடு பார்த்தேன். மன்மதன் படத்தை போல இதிலும், சிம்பு நடிப்பில் மிரட்டியுள்ளார். சில இடங்களில், அதை விட சிறப்பாக அசத்தியுள்ளார். தனது இயக்கத்தை போலவே, நடிப்பிலும் எஸ். ஜே. சூர்யா ஃபுல் ஃபார்மில் பட்டையைக் கிளப்பியுள்ளார். திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, பிஜிஎம், எடிட்டிங், சண்டைக் காட்சிகள், சவுண்ட் மற்றும் இயக்கம் என அனைத்தும் சூப்பர்.
வைரல் பதிவு
மொத்தத்தில், வெங்கட் பிரபு சார் மற்றும் யுவன் சார்.. நான் சொல்ல வேண்டியது, நிமிர்ந்து நில் துணிந்து செல்.. (நான் பலமுறை என் வாழ்வில் நம்பிக்கை இழந்த போது, இந்த பாடல் தான் என்னை ஊக்கப்படுத்தியுள்ளது. அதற்காக, உங்கள் இருவருக்கும் நான் திரும்பி என்ன செய்யப் போகிறேன் என்பதே தெரியவில்லை.) ஒட்டு மொத்த நடிகர்கள் மற்றும் படக் குழுவினருக்கும் எனது மதிப்பும், அன்பும்' என உணர்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார். இந்த பேஸ்புக் பதிவு, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
மகிழ்ச்சியில் சிம்பு ரசிகர்கள்
மாநாடு திரைப்படம் வெளியாகி, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் ஆன போதும், தொடர்ந்து திரை பிரபலங்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. அதே போல, நடிகர் சிம்புவின் நடிப்பில், வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு வரவிருப்பதால், மகிழ்ச்சியில் திளைத்து போயுள்ளனர் சிம்பு ரசிகர்கள்.