நடிகர் சசிகுமார் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' , 'சீமராஜா' படங்களின் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் 'எம்ஜிஆர் மகன்' படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர் அந்தோனி தாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சசிக்குமாருக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்கிறார், இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி நடிக்கின்றனர். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் சென்ற வருடமே முடிந்துவிட்டது. வெளியீட்டுக்கு தயாரன நிலையில் இருந்த இந்த திரைப்படம் கோவிட் 19 காரணமாக திரையரங்குகள் பிரச்சினை காரணமாக வெளியீடு தாமதமானது.
இதனால் தீபாவளி நவம்பர் 4-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த படம் பீரிமியராக வெளியாகவுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் பற்றி Behondwoods சேனலுக்கு ப்ரத்யேக பேட்டியை நடிகரும் இயக்குனருமான சசிகுமார் அளித்திருந்தார். அதில் பல விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார், குறிப்பாக இயக்குனர் சமுத்திரக்கனிக்கும் தனக்குமான நட்பு, இயக்குனர் பொன் ராம் பற்றி, தமிழின் முன்னணி இயக்குனர்களான பாரதிராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றோர் ஏற்படுத்திய தாக்கம் பற்றி, தனக்கு இருக்கும் கடன் பற்றியும் பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் தல அஜித்திற்கும் இது போல கடன் இருந்ததாகவும், அந்த கடன்களை அடைக்க அஜித் தொடர்ச்சியான படங்களில் நடித்தது, அப்போதைய காலக்கட்டத்தில் அஜித்தின் படங்களை ரசிக்கும் ரசிகனாக தனக்கு ஆச்சர்யமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கடன்களை எல்லாம் மீறி தல அஜித் இன்று அடைந்துள்ள இடம் மிகப்பெரியது என்றும் கூறியுள்ளார்.
சசிக்குமார் அவர்களின் முழு பேட்டியின் காணொளி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.